புத்த மதத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்
நேற்று முன்தினம் மீண்டும் ராக்கின் மாகாணத்தில் கலவரம் ஏற்பட்டது. அதில், புத்த மதத்தை சேர்ந்தவர்கள் கும்பலாக சென்று முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள்.
அதில் 94 வயது முஸ்லிம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 70 வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இக்கலவரம் தாய்சங் நகரில் மூண்டது. அப்போது 800 பேர் அடங்கிய கும்பல் தெருக்களில் கூடி வன்முறை செயல்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, கலவரம் மூண்ட ராக்கின் மாகாணத்தை மியான்மர் அதிபர் தெயின் செயின் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.

Post a Comment