அபிவிருத்தி வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம் வழங்கிய அல்லாஹ்விற்கு நன்றி கூறுகின்றேன் - அதாஉல்லா
(ஏ.ஜீ.ஏ.கபூர்)
முன்று தசாப்தகால கொடிய யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அக்கரைப்பற்று மக்களே. அரசாங்க வைத்தியசாலை, பொதுநூலகம், பொதுச் சந்தை, பஸ் நிலையம், பிரதேச சபைக் கட்டிடம் அழகிய மைதானம உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொடிய யுத்தத்தினால் இழந்தவர்கள் அக்கரைப்பற்று முஸ்லிம்களே. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் எல்லாம் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டபோது முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இப்பிரதேசம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டபோது எமது மக்கள் பொறுமை காத்தார்கள். அந்தப் பொறுமையின் பலனை இன்று அனுபவிக்கின்றார்கள் பொறுத்தார் அரசாள்வார் என்பது இதுதான் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் நூற்றிப் பத்து மில்லியன் ருபா நிதி முலம் புதிதாக நிருமானிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியினை (நவீன வளாகம்) திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் உயர்ந்த மண்ணின் உன்னதப் பெருவிழாவும், உன்னத விருது வழங்கும் நிகழ்வு முதலியன அண்மையில் மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின்னர் மும் மொழிகளிலும் அமைக்கப்பட்ட நினைவுப்; படிவத்தைத் திரைநீக்கம செய்து வைத்தபின்; அஸ்ஷேய்க், அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் அவர்களுடன் இணைந்து நவீன மாநகர கட்டிடத் தொகுதியினையும், நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். பின் மாநகர சபை சபா மண்டபத்தையும் திறந்து வைத்து மாநகர முதல்வர் தலைமையில் இடம்பெற்ற துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்ட பின்னர் தொடர்ந்து மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸக்கி தலைமையில் நடைபெற்ற உயர்ந்த மண்ணின் உன்னதப் பெருவிழாவும் உன்னத விருது வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டு மாநகர கட்டிடத் தொகுpயை உயர்ந்த மண்ணின் உன்னத விருதுகளையும் வழங்கி வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
கொடிய யுத்தத்தினால் அனைத்து உட்கட்மைப்பு வசதிகளையும் இழந்து போதிய அரசியல் பலமும் இல்லாத நிலையில் அபிவிருத்தியில் பின் தங்கியிருந்த இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக கச்சேரி முதலிய இடங்களில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலின்போது பாதிக்கப்பட்ட எமது பிரதேச அபிவிருத்திபற்றிக் கதைத்தால் அவைபற்றியாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அபிவிருத்தியில்லாத நிலையில் நல்ல மனித நேயமும், எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கும், மிகப் பெரிய பொறுமையும் உள்ள எமது மக்களின் பொறுமைக்கு அல்லாஹ் கிடைக்காத அபிவிருத்தியையும் விட மிகச் சிறந்த அபிவிருத்தியை இன்று வழங்கியுள்ளான். உண்மையில அப்போது எமக்கு அபிவிருத்தி கிடைத்திருந்தால் சாதாரனமான ஒரு இரண்டு மாடிக் கட்டிட வைத்தியசாலை முதலிய சாதாரனக் கட்டிடங்களே கிடைத்திருக்கும் ஆனால் இன்று நாம் அழகிய பலமாடிகள் கொண்ட அழகிய கட்டிடங்கள் உட்பட அழகான முறையில் திட்டமிட்டு அபிவிருத்திகளைச் செய்யக் கூடியதாக உள்ளது. இந்த நல்மனம் படைத்த பொறுமைசாலி மக்களுக்கு இந்த அபிவிருத்தி வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம் வழங்கிய அல்லாஹ்விற்கு நன்றி கூறுகின்றேன்.
தலைமைகள் எப்போதும் பொறுமையுடனும் , தூரதிருஷ்டியுடனும் சிந்தித்து செயற்படுகின்றபோது திட்டமிட்ட அடிப்படையில் நீண்ட காலம் மக்களுக்குப்பயன்படக் கூடிய சிறந்த அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்த முடியும். இன்று எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படையாக எமது பிரதேச சபை மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டு அதற்கான நவீன கட்டிடமும் கட்டப்பட்டு உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் அடிநாதமான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிறந்த சேவையை வளர்ந்து வரும் எமது புதிய மாநகர சபை உங்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளது. அதற்காக சேவையாற்றி வரும் மாநகர முதல்வர்,பிரதி முதல்வர் உட்பட அனைத்து மா நகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உத்தியோகத்தர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்றார்.
நவீன முறையில் மாநகர கட்டிடத் தொகுதியினை நிர்மானிப்பதில் பங்களிப்பு வழங்கிய உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, மேலதிக செயலாளர்களான ஏ.அப்துல் மஜீத், திருமதி.பண்டார, கட்டிடக் கலைஞர் எம்.இஸ்மாயில், பொறியியலாளர்களான எஸ்.சிறாஜுதீன். எம்.றிப்கான், ஆகியோர்களை மாநகர சபை முதல்வர் உறுப்பினர்கள் பள்ளிவாயல்கள் மற்றும் ஊர்மக்கள் சார்பில் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மாநகர முதல்வருடன் இணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவித்தார்.
அதுமாத்திரமன்றி அக்கரைப்பற்று மாநகரின் கல்வி , பொருளாதாரம்,கலை,கலசாரம், விவசாயம், ஆத்மீகம், பொதுச் சேவை என்பவற்றின் வளர்ச்சிக்காக அரசாங்க அதிகாரிகளாகவும், பின் ஓய்வு பெற்ற பின்னரும் சிறந்த சேவைகளை புரிந்த இருபது பேர் பொன்னாடை போர்த்தி, தங்கப் பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி உயர்;ந்த மண்ணின் உன்னத விருது வழங்கிப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் உயர்ந்த சேவையபை; பாராட்டி மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தனர். அக்கரைப்பற்று மண்ணுக்கு உயர்ந்த ஸ்தானம் வழங்கி நகரின் அபிவிருத்திக்காக அயராது சேவையாற்றியமைக்காகவும், மாநகரசபைக்கு நவீன கட்டிட வளாகத்தை நிர்மானித்து வழங்கியமையயைப் பாராட்டியும் அனைத்துப் பள்ளிவாயல் தலைவர் ரி.எஸ்.ஆதம் லெவ்வை, மற்றும் ஜும்ஆப் பள்ளிகளான ஜீம்ஆ பெரிய பள்ளி, ஜும்ஆ நகர்ப் பள்ளி, ஜும்ஆ புதுப் பள்ளி, நூறானியாப் பள்ளி, பட்டியடிப்பிட்டி ஜும்ஆப் பள்ளி, பதுர்ப்பள்ளி வாயல்களின் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியினை (நவீன வளாகம்) திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இரண்டாவது நாளும் நடைபெற்றது. உயர்ந்த மண்ணின் உன்னத விருது வழங்கும் நிகழ்வும் இரண்டாவது நாள் நடைபெற்றது. கலை , கலாசார நிகழ்சிசகளும் இடம்பெற்றன.
.jpg)
Post a Comment