சமாதான நீதவான்
(யு.எல்.எம். றியாஸ்)
அல் - ஹாஜ் எம்.ஐ. நௌபல் அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.பி.மொஹிதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முஹம்மது இப்ராஹீம் பல்கீஸ் உம்மாவின் மூத்த புதல்வனான இவர் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
வங்கிச் சேவையில் 36 வருட காலங்களுக்கு மேலாக சேவையாற்றி வரும் இவர் அம்பாறை மாவட்டத்தில் பலவருட காலமாக இலங்கை வங்கியில் முகாமையாளராக கடமைபுரிந்து வருகிறார்.
தற்போது சம்மாந்துறை இலங்கை வங்கியில் முகாமையாளராக பனி புரியும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார் இவர் கடந்த 2009ம் ஆண்டின் சிறந்த சமூக சேவைக்கான சாம சிறி தேச கீர்த்தி என்ற இன நல்லுறவிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Masha Allah...... மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete