வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நடைபயணம்
(பா.சிகான்)
8 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து நடை பயணமாக வந்த தம்பிராசா 09-10-2013 மாலை யாழ் நகரினை வந்தடைந்தார்.
கடந்த சனியன்று வவுனியாவில் இருந்து தனது நடைபயணத்தை ஆரம்பித்து 4 நாட்களின் பின்னர் தற்போது யாழ் மாட்ட செயலகத்தின் முன்னால் முடிவுக்கு வந்துள்ளது.
இப்பயணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் இருந்து பயணம் ஆரம்பித்த நிலையில் அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள்,இனந்தெரியா நபர்களின் கண்காணிப்பு என்பவற்றுக்கு முகம்கொடுத்ததாக தெரிவித்தார்.
மேலும் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி யாழ் அரசாங்க அதிபரினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதர பிரதிகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும்' கூறினார்.

Post a Comment