ஹஜ்ஜிக்குத்தான் போனார்களா..?
(முனையூர் ஏ; ஸமட்)
கண்ணீரில்
கொஞ்ச உறவுகள்
கவலைளில்
மிச்ச உறவுகள்
அவர்கள் பறக்கிறார்கள்
பல ஆண்டுகளாய்
மக்கமா நகர் நோக்கி...
திண்னையில்
தங்கச்சிமார்
பாயிழைத்து பாயிழைத்து
கை ரேகைகளைத் தொலைத்துவிட்டு
இழைத்த பாயினிலே
படுத்துக் கிடக்கிறார்கள்
புட்டினியோடு.....
ஓட்டைக் குடிசைகளுக்குள்
ஓற்றை விளக்கொளியில்
தம்பி மார்களும்
தாரங்களும் பிள்ளைகளும் கூட
கவலையோடு கண்ணிமைக்க
காக்காமார் ஹஜ்ஜுக்குப் போகிறார்....
அன்னையர்களோ
அடுத்தவர் தயவில்
அன்னம் பெற்று
அன்றாட ஜீவியம் கடத்த
அன்பு மகன்மார்
அரபு மண்ணுக்குச் செல்கிறார்கள்....
தங்கையர்களின்
பசி – அவர்கள்
வயிற்றுக்குப் தெரியாது
தம்பிமார்களின்
வறுமை – அவர்கள்
வங்கிப் பணத்துக்குப் புரியாது
அன்னையர்களின்
அழுகை – அவர்கள்
அன்பு இல்லத்தரசிகளுக்கு விளங்காது.....
சொன்னார்கள் - ஊரார்
அவர்களுக்கு ஒன்றுமே
தெரியாதாம்
அவர்கள் போனது ஹஜ்ஜுக்கள்ளவேயென்று....?
.jpg)
Post a Comment