Header Ads



அம்பாறை மாவட்டு அரசாங்க அதிபரின் விளக்கம்

(ஏ.ஜி.ஏ.கபூர்)

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டமடு வயல் பிரதேசம் கால்நடை மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் , அந் நிலப்பிரதேசத்திற்குள் யாரும் உட்புகுவதற்கோ, எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கோ உடனடியாகத் தடைவிதிப்பதாக நான் அறிவிக்கவில்லையெனவும், அவ்வாறு நான் கூறியதாக வெளிவந்த பத்திரிகைச் செய்தி தவறானது எனவும் அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார். 

வட்டமடு மேய்ச்சல் தரைக்குள் உட்பிரவேசிக்க உடனடித் தடை என்ற தலைப்பில் வட்டமடு வயல் பிரதேசம் கால்நடை மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் , அந் நிலப்பிரதேசத்திற்குள் யாரும் உட்புகுவதற்கோ, எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கோ உடனடியாகத் தடைவிதிப்பதாக அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் தெரிவித்தாக கடந்த 28.09.2013 சனிக்கிழமை தினகரன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி சம்பந்தமாக அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் நேற்று 02.10.2013 புதன்கிழமை ஓய்வு பெற்ற காணி அதிகாரியும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளருமான ஏ.பி.தாவூத் அவர்களின் தலைமையில்;  வட்டமடு விவசாயக் குழு,கிறீன்பீல்ட், முறாணவட்டி, தோணிக்கல் தெற்கு, கொக்குளாவ, வட்டமடு புதிய கண்டம் ஆகிய கண்டங்களின் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து மேற்படி செய்தியை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தபோதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

 கடந்த 26.09.2013ல் ஆலையடிவேம்பு, திருக்கோவில் கால் நடைப் பண்ணையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண சபை முன்னாள உறுப்பினர் கே. புஷ்பராஜா, அம்பாரை பிரிவேனா விகாராதிபதி வண.சம்மேந்த தேரர் அடங்கிய குழுவினர் என்னைச் சந்தித்து  மேய்ச்சல் தரைக்காக வட்டமடுவில் உள்ள நான்காயிரம் ஏக்கர் நிலப் பிரதேசம் 1976.09.17ம் திகதிய அரச வர்த்தமானி முலம் மேய்ச்சல் தரைக்கென பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இப் பிரதேசத்தில் சட்ட விரோத காடழிப்பு இடம்பெற்று வருகின்றது. காட்டை அழித்து நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. இதனால் வனஜீவராசிகள் மடிவதுடன், கால் நடைகள் உணவின்றி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேய்ச்சல் தரையைப் பாதுகாத்துத் தருமாறு கோரினார்கள்.

வட்டமடுப் பிரதேச நிலப்பரப்பு சம்பந்தமான பிரச்சினை தற்போது நீதிமன்ற நடவடிக்கையில் இருக்கின்ற காரணத்திளால் அதுபற்றி எனக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லை.. என்னால் எதுவும் செய்ய முடியாது. நிலப் பரப்பினுள் போ என்று சொல்லவோ அல்லது நிலப் பரப்பை விட்டு வெளியேறு என்றோ சொல்ல அதிகாரமில்லை என்று கூறியதோடு , உங்களுக்குப் பிரச்சினையிருந்தால் உங்களது சட்டத்தரணி முலம் நீதிமன்றம் சென்று தீர்த்துக் கொள்ளுமாறும் கூறினேன். 

அதே நேரத்தில் வனப் பாதுகாப்புத் திணக்கள அதிகாரி எமது திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பினுள் சட்ட விரோத காடழிப்பு நடைபெறுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தி காட்டு வள மேம்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பாதுகாக்குமாறு எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது: மாவட்ட அரச அதிபர் என்ற வகையில் உண்மையாகவே சட்டவிரோதமாக காடழிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்றால் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தேன். 

அது அரச அதிபர் என்ற வகையில் எனது கடமை. இவ்வாறுதான் கூறினேனே தவிர, வட்டமடு நிலப் பிரதேசம் கால்நடை மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் , அந் நிலப்பிரதேசத்திற்குள் யாரும் உட்புகுவதற்கோ, எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கோ உடனடியாகத் தடைவிதிப்பதாக நான் அறிவிக்கவில்லையென அம்பாரை அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் மேலும் தெரிவித்தார். 

இதே நேரத்தில கடந்த 1976ஆம் ஆண்டில்; அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டதாக  வர்த்தமானி முலம பிரகடனப்படுத்தப்பட்ட 4000ஏக்கர் வட்டமடு நெற் செய்கைக் காணி;, தற்போது அவசரகாலச் சட்டம் காலாவதியாகிவிட்டதால் வர்த்தமானி அறிவித்தல் வலுவிழந்துவிட்டதாகவும் இந்த நிலப்பரப்பு சட்டப்படியான உரிமைப்பத்திரம் உள்ள காணி உரிமையாளர்களுகக்கு நெற் செய்கைக்கு வழங்கலாம் என்ற ஒரு கருத்து எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது சம்பந்தமாக சட்டமா அதிபரைத் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஆரசாங்க அதிபருடன் சுமுகமாக நடைபெற்ற இச் சந்திப்பின்போது  ஓய்வு பெற்ற காணி அதிகாரியும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளருமான ஏ.பி.தாவூத அவர்களின் தலைமையில்;  வட்டமடு விவசாயக ட்டமடு விவசாயக் குழு, கிறீன்பீல்ட், முறாணவட்டி, தோணிக்கல் தெற்கு, கொக்கிளாவ, வட்டமடு புதிய கண்டம் ஆகிய கண்டங்களின் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்தோடு, வட்டமடு பிரதேச நெற்காணிகளில் தொடர்ந்து நெற்செய்கையில் ஈடுபட உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

No comments

Powered by Blogger.