Header Ads



அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் விஞ்ஞான பரிசோதனை கண்காட்சி

(ஏ.எல்.ஜனூவர்)

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விஞ்ஞான ஆசிரியர்கள் மற்றுமு; மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான பரிசோதனை கண்காட்சி இன்று பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூட மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் வி.ரி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.ஹாசிம் பிரதம அதிதியாய் கலந்து கொண்டு மாணவர்களால் ஆக்கப்பட்ட ஆக்கங்களையும், பரிசோதனைகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ், விஞ்ஞான ஆசிரியர் ஆலோசகரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான வாஹிட் அவர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியினை பார்வையிட அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையும், அல்-அர்ஹம் வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.




No comments

Powered by Blogger.