திவிநெகும 5ஆம் கட்டம் 11 ஆம் திகதி ஆரம்பம் - ஜனாதிபதி தலைமையில் நிகழ்வுகள்!
திவிநெகும தேசிய திட்டத்தின் ஐந்தாவது கட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி சுப வேளையான முற்பகல் 10.11மணிக்கு நாடுமுழுவதிலும் ஆரம்பமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும். .
நாடுமுழுவதிலும் 324 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உரிய 14,008 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரே நேரத்தில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும் திவிநெகும திட்டம் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆரம்பமானது.
ஜனாதிபதியின் இந்த கருத்திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.விவசாயம், கால் நடைவளம், கடற்றொழில், மனைப் பொருளாதார கைத்தொழில் என மூன்று பிரிவுகளாக இது மேற்கொள்ளப்பட்டது.
1,25,000 வீட்டுத் தோட்ட வேலைத்திட்டமும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது .
14 இலட்சம் மரக்கறி விதைத் தொகுதிகள், 23 இலட்சம் பழக் கன்றுகள், தென்னங்கன்று, பயிர்கள், மருந்து மூலிகை கன்றுகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.திவிநெகும திட்டத்தில் 25 இலட்சம் பேர் பங்கு கொள்கின்றனர்.
திவிநெகும திட்டத்தின் நான்காம் கட்டம் கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. திவிநெகும திட்டத்தின் வெற்றியை மல்வத்துஇ அஸ்கிரி பீடங்களில் மகாநாயக்க தேரர்கள் உட்பட மதகுருமாரும் பாராட்டியுள்ளனர்.
இலங்கையின் தனி நபர்களின் மரக்கறி, பழ வர்க்கங்களின் பயன்பாடு இத்திட்டத்தின் மூலம் அதிகரித்ததாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.பெரும் போகத்தை இலக்காகக் கொண்டே இது ஆரம்பமாகிறது. 18 அமைச்சுக்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Post a Comment