Header Ads



சரத் பொன்சேக்காவின் இலக்கு..!

(vi) அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து பல­மா­ன­தொரு ஆளும் கட்­சி­யாக உரு­வா­வதே எமது இலக்கு. நாட்டின் மூன்றாம் சக்­தி­யாக உள்ள நாம் வெகு விரைவில் அர­சாங்­கத்­தினை அமைப்போம் என ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார்.

மேலும், மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே மக்கள் என்னை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்து விட்­டனர். எனினும், அர­சியல் சூழ்ச்­சியே என்னை சிறைக்கு அனுப்­பி­விட்­டது எனவும் அவர் தெரி­வித்தார்.

ஜன­நா­யகக் கட்­சி­யினால் ஏற்­பா­டு­ செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

இன்று நாம் பல­மா­ன­தொரு கட்­சி­யாக உரு­வா­கி­யுள்ளோம். கடந்த 6 மாத காலத்தில் நாம் சிறந்த மூன்றாம் சக்திக் கட்­சி­யாக எம்மை இனங்­காட்­டி­யுள்ளோம்.

எனினும், எமது அர­சியல் பயணம் 2010ஆம் ஆண்­டி­லேயே ஆரம்­பித்து விட்­டது. யுத்த வெற்­றியின் பின்னர் மக்கள் மனதில் நானே சிறந்த தலை­வ­னாக விளங்­கினேன். 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் எனக்கே அதிக வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன. அப்­போ­தைய நிலை­மையில் நியா­ய­மா­ன­தொரு தேர்தல் நடந்­தி­ருக்­கு­மானால் இன்று எனது தலை­மையின் கீழே நாடு செயற்­பட்­டி­ருக்கும். மக்­க­ளையும் நாட்­டையும் சிறந்த முறையில் பாது­காத்து சிறந்­த­தொரு மக்கள் ஆட்­சி­யினை நடத்­தி­யி­ருப்பேன்.

எனினும், அர­சி­யலில் என்னைப் பழி­வாங்கி எனது வெற்­றி­யினை முடக்கி சிறைக்கு அனுப்­பி­விட்­டனர். யார் என்னை அடக்­கி­வைத்­தாலும் நான் அஞ்­சப்­போ­வ­தில்லை. இந்­நாட்டு மக்­களை காப்­பாற்­று­வ­தற்­காக நான் மீண்­டு­மொரு முயற்­சி­யினை எடுத்­துள்ளேன். இன்று நடக்கும் அரா­ஜக ஆட்­சி­யினை நீக்கி நாட்­டினை காப்­பாற்ற என்­னா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் நான் கையாள்வேன்.

மேலும், இம்­முறை மாகாண சபைத் தேர்­தல்­களில் 90 ஆயிரம் மக்கள் என்னை ஆத­ரித்­துள்­ளனர். எவ்­வித உத­வி­க­ளையும் நான் செய்­யாது மற்ற அர­சியல் கட்­சி­களைப் போல் இலஞ்சம் கொடுக்­காமல் நான் 90 ஆயிரம் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுள்ளேன். இதை எமது மிகப்­பெ­ரிய வெற்­றி­யா­கவே கரு­து­கின்றோம். எனவே, வரும் தேர்­தல்­க­ளிலும் எம்­மா­லான அனைத்து முயற்­சி­க­ளையும் எடுத்து பல­மா­ன­தொரு மக்கள் கூட்­டத்­தினை உரு­வாக்கி அர­சாங்­கத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுப்போம்.

எமது நோக்கம் பல­மான இரண்டாம் சக்­தி­யா­வ­தல்ல. எமது நோக்­கமும் இலக்கும் பலமான அரசாங்கத்தினை அமைப்பதாகும். எனவே, எதிர்வரும் காலங்களில் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து பலமான அரசாங்கத்தினை உருவாக்கி இந்த நாட்டை ஜனநாயக ரீதியில் ஆளுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.