Header Ads



சமல் ராஜபக்ஸவை பிரதமராக நியமியுங்கள் - ஜனாதிபதிக்கு யோசனை கூறிய அமைச்சர்

(Sfm) இலங்கையின் அடுத்த பிரதமர் பதவி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் குமார வெல்கம யோசனை முன்வைத்துள்ளார்.

மாத்தறை, கதிர்காமம் தொடரூந்து பாதையில் பெலியத்த வரையான பகுதியை அமைக்கும் பணிகளின் ஆரம்ப நிகழ்வின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். குறித்த நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் குமார வெல்கம, நாட்டின் அடுத்த தலைமைத்துவத்துக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தகுதியானவர் என்று தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பழைய உறுப்பினராக சபாநாயகர் திகழ்வதாகவும், ஜனாதிபதி கட்சியில் இணைந்து கொள்வதற்கு முன்னரிலிருந்து அவர் உறுப்புரிமை பெற்றிருந்தார்.

இதனை கூறுவதற்கு சிலர் பயப்படுகின்றார் ஆனால் தான் ஜனாதிபதியிடம் இதுபற்றி கூறியதாகவும் அமைச்சர் தெரிpவத்தார்

No comments

Powered by Blogger.