பரீட்சையில் சித்தியடையாத சிறுவர்கள் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
ஓக்டோபர் 01 சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடரந்தும் வெளியிடுவது குறித்து மீள்பரிசிPலனை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் தெரிவித்தார்.
காத்தான்குடி அல்அமீன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஏனைய பரீட்சைகளைப் போன்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை சான்றிதழ் பரீட்சை அல்ல.அது போட்டிப் பரீட்சையாக இருப்பதால் தோற்றுகின்ற மாணவர்களில் சிலர் சித்தியடைவார்கள்.பலர் சித்தியடைய மாட்டார்கள்.
அது அவ்வாறிருக்க சிறுவர்கள் சந்தோசமாக கொண்டாடும் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படுவதானது சித்தியடையாத சிறுவர்களின் உள்ளத்தை கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாக்குவதோடு உளவியல் ரீதியில் பாரிய பாதிப்யைம் ஏற்படுத்தும்.
பொதுவாக புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் பல்வேறு சர்ச்சசைகள் எழுப்பப்படுகின்றன.குறிப்பாக சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டுவது அவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் பெயர்ப்பலகையில் குறிப்பிடுவது சித்தியடையாத சிறுவர்களின் உள்ளங்களை பாரியளவில் புண்படுத்தும்.
ஆகவே இப்பரீட்சையில் சித்தியடையாத சிறுவர்கள் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை.சித்தியடையாதவர்கள் ஒரு போதும் நாங்கள் தோற்று விட்டோம் என நினைக்கக் கூடாது. நீங்களும் வெற்றி பெற்றவர்களே என்று நினைக்க வேண்டும். மாணவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக வேண்டி அந்தப் பரீட்சையில் சித்தியடையாமல் விட்டிருப்பார்கள்.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்கள் மனம் புண்படும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. சிறுவர்கள் என்போர் அவர்களது உரிமைகள் மாத்திரம் பார்க்காமல் அவர்களது பொறுப்புக்கள்,கடமைகள் என்பவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும். ஆகவே சிறுவர்கள் உலகளாவிய ரீதியில் மதிப்பளிக்கப்பட வேண்டும் அவர்கள் சகல துறைகளிலும் முன்னேற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment