மன்னார் வலயக் கல்விப் பணிமனையில் தொழிற் திறன் பயிற்சி
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
முறை சாராக் கல்விப் பிரிவின் கீழ் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் மூன்று மாதம் மற்றும் ஆறு மாதம் தொழிற் திறன் பயிற்சி பெற்ற சுமார் 175 பேருக்கு இன்று (02) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மன்னார் கல்வி வலயத்தின் கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எம்.சியான் தலைமையில் இடம்பெற்றதாக முறைசாராக் கல்விப் பகுதியின் உதவிப் பணிப்பாளர் திருமதி யோகாநந்தன் தெரிவித்தார்.
மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் கற்று முடித்த மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்கள் மேற்படிப் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மேற்படிப் பயிற்சி நெறியில் கணனித் துறை, பனம் பொருள் உற்பத்திகள், கழிவுப் பொருட்களில் கைப்பணிப் பொருட்கள் தயாரித்தல் , முத்து நகை அலங்காரங்கள் செய்தல் மற்றும் தையல் பயிற்சி உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வழங்க்கபட்டன.
நிகழ்விற்கு பிரதம அதிதயாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டதுடன் உள்ளு10ராட்சி ஆணையாளர். எம்.ஏ.துரம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Post a Comment