நீர்கொழும்பு மற்றும் புத்தளத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கூட்டம்,,!
யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கவிதைகள் மற்றும் நூல் வெளியீடுகள், குர்ஆன் மற்றும் மார்க்க கல்வி போன்ற பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிலைநாட்டிய நபர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வொன்றை ' சாதனையாளர் பாராட்டு விழா ' ஒன்றில் வழங்க யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நீர்கொழும்பு மற்றும் புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை சந்தித்து விழா ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டம் நீர்கொழும்பில் பெரியமுல்லை டிப்போ வீதியிலுள்ள நீர்கொழும்பு விஸ்டம் கல்லூரி மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27.10.2013 அன்று காலை 9.15 மணியளவில் இன்ஷா அல்லாஹ் இடம்பெறும்.
புத்தளம் வாழ் யாழ் முஸ்லிம்களுக்கான கூட்டம் புத்தளம் போல்ஸ் வீதியிலுள்ள சைனப் மகளிர் பாலர் பாடசாலை மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27.10.2013 அன்று மாலை 4.00 மணியளவில் இன்ஷா அல்லாஹ் இடம்பெறும்.
இக்கூட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு இடம்பெயர்ந்த பின்னருள்ள நிலமைகள் மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களில் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள் போன்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புத்தக வடிவில் வெளிக்கொண்டு வரப்படவுள்ளது. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சித்தி, சாதாரண தர மற்றும் உயர்தரங்களில் திறமைச் சித்தி பெற்றவர்கள், பல்கலைக்கழக பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு, ஆசிரியர், நிர்வாகத்துறையிலான படிப்புகள், ஆலிம் மார்க்க கல்வி, காபிழ் காரிகள், சைக்கியோட்டம், மரதன் ஓட்டம், ஓட்டப்போட்டிகள், உதைப்பந்தாட்டம், கிறிகட், கூடைப்பந்து கராட்டே, சிலம்படி போன்ற விளையாட்டுக்கள், கவிதைகள் கட்டுரைகள் நூல் வெளியீட்டாளர்கள், பத்திரிகைத்துறையில் கடமையாற்றுவோர், விமானி, கணக்காளர்கள், என்ஜினியர்கள், வைத்தியர்கள், விரிவுரையாளர்கள் போன்றவர்கள் மற்றும் மேற்படி துறைகளில் பங்காற்றிய காலம் சென்ற யாழ்ப்பாண முஸ்லிம்களது மூதாதையர்கள் பற்றிய விடயங்களும் சேகரிக்கப்படவுள்ளது. மேலும் இவ்விழாவில் தமது ஏதாவது ஒரு துறையிலான சாதனைகளை இடம்பெறச் செய்ய விரும்பும் அத்தனை பேரும் இக்கூட்டத்தில் கலந்து தமது அல்லது தமது மூதாதையர் அல்லது வாரிசுகிளின் சாதனைகளை தெரியப்படுத்த முடியும்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்புகளையும் தகவல்களையும் வழங்குமாறு சகல யாழ் முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு 0774457416 அல்லது 0774628168 அல்லது 0772916744 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Post a Comment