Header Ads



2013 உலக மகாநாட்டு விருது வழங்கும் விழாவில். ஜனாதிபதி மஹிந்த ஆற்றிய உரை

அமைச்சர் பேராசிரியர் பீடர் ப்ரக் மற்றும் தலைமை பீடத்தில் இருக்கும் ஏனைய உறுப்பினர்களே அன்பர்களே, 

தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் மிகவும் முக்கியமான சந்தர்ப்பமான 2013 உலக மகாநாட்டு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உங்களுடன் இந்த மாலைப் பொழுதை கழிப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிட்டியமைக்காக நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வு பல்வேறு மொழிகள், கலாசாரங்கள், தேசங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களை ஒன்று சேர்த்துள்ளது. எமது நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உங்கள் அனைவரையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம். ஆயுபோவன்! தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற இச்சந்தர்ப்பத்தில், அதில் அனைத்து நாடுகளும், அனைத்து பிரசைகளும் கலந்துகொள்ள வேண்டுமென்பது எனது கருத்தாகும். தொழில்நுட்பத்தின் பயன்களை உயர் வகுப்பில் உள்ள ஒரு சிலருக்கு மாத்திரம் வரையறுக்காமல் சமூகத்தில் அனைத்து நிலைகளுக்கும் கொண்டு செல்வதில் எனது அரசு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. இந்த நோக்கத்தில்தான் நாம் ஈ- ஸ்ரீ லங்கா அபிவிருத்தி முயற்சியை ஆரம்பித்தோம். 

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் எமது தேசிய கொள்கைகள் அடிப்படையாக இருப்பதும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பெறுபேறு நாட்டின் சாதாரண பிரசைகள் வரை விரிவடையக்கூடிய வகையில் ஈ-தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சித்திட்டத்தின்போது இந்த செயல்முறை அச்சொட்டாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பது எமது தீவிர நம்பிக்கையாகும். உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்திற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் பிரதான காரணமாக இருக்கின்றது என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும். எம்மைப்போன்ற ஒரு நாட்டில் சமூக பொருளாதார அபிவிருத்தியின் வரையறைகளை வேகமாக முன்தள்ளக்கூடிய ஆற்றல் உள்ள கருவி இப்புதிய தொழில்நுட்பம் என்பதினால் எமது முன்னேற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈ-ஸ்ரீ லங்கா முயற்சியின் எதிர்கால நடவடிக்கையுடனும் அரச துறையில் மீளமைப்பின் மூலமும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்களை கிராமிய மக்களின் வாசல் படிக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும். இன்று நாம் 'ஒரு உலகக் கிராம எண்ணக்கரு'வைப்பற்றி கதைத்தாலும், எனக்கு தேவையாக இருப்பது எமது மக்களுக்கு அர்த்தமுள்ள ஒர் உலக கிராமமாகும். கிராமமும் நகரமும் மாகாணமும் மாவட்டமும் ஒன்றிணைவதன் மூலம் அந்த தொடர்புகளின் கோர்வை வெளியுலக அறிவுடன் இணைய வேண்டும் என்பதை எமது அரசாங்கம் என்றும் தீவிரமாக தெரிவித்து வந்துள்ளது.

இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வற்காக நமது நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர் வர்க்கத்திற்கும் கிராமிய இளைஞர்களுக்கும் அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கருவிகள் இருக்க வேண்டும் என்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை சட்டகமான மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கை சட்டத்தின் முதன்மை நோக்கமாக இத்தொழில்நுட்பத்தின் தேவையை வலியுறுத்தினேன். எமது மக்கள் ஆங்கில மொழியையும் அத்துடன் கணனி மொழியையும் அத்தோடு சேர்த்து கணனி அறிவையும் பெற்று இணையத்தளத்தை பயன்படுத்துவதற்கான ஆற்றலையும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் இணையப்ப பாவனையின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாப்பதுவும் கட்டாயமானதாகும்.

இதன்பொருட்டு நெனசல என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகின்ற டெலி மையங்கள் வலைப் பின்னல் ஒன்று நாடு முழுவதிலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இன்று நாடெங்கிலும் 720 நெனசல நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் 3500 தகவல் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பெறுபேறுகளை இப்பொழுது பார்க்க முடிகிறது. 2002ஆம் ஆண்டில் 4 & மாக இருந்த தகவல் மற்றும் தொடர்பாடல் எழுத்தறிவு இன்று 40 & வரை உயர்ந்துள்ளது. 2015ஆம் ஆண்டளவில் அதை 75 & வரை உயர்த்துவது எமது நோக்கமாகும். நீங்கள் அறிந்துள்ள வகையில் எனது அரசு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கிராமிய முன்னேற்றத்தின் கருவியாக பயன்படுத்தி நமது நாட்டின் கிராமத்தை உலக கிராமத்தின் தொடர்ச்சியான ஒரு பகுதியாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. ஈ-ஸ்ரீ லங்கா முயற்சியின் ஊடாக பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றி அதுவாகும். 

தற்பொழுது இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்காக எமது அதிகாரிகள் ஏற்கனவே ஈ-அபிவிருத்தி திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான வரைவை தயாரித்துள்ளனர். அது பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் மற்றும் வறுமையை ஒழித்தல் என்ற தேசிய நோக்கத்தை இலக்காக கொண்டுள்ள ஒன்றாகும். இத்திட்டத்தின் ஊடாக அறிவை அடிப்படையாகக்கொண்ட உலகத்தோடு இணைந்த பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் சமூகத்திற்குள் பிரவேசிப்பது எமது எதிர்பார்ப்பாகும். எமது தொலைநோக்கு ஒரு SMART SRI LANKA வாகும். குறைந்த மார்க்கத்தில் உச்ச வெற்றியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய SMART GOVERNMENT எனும் தேர்ச்சிமிக்க அரசின் ஊடாக அந்த நோக்கின் பக்கம் நாம் பயணம் செய்கின்றோம். அரச துறையை மீளமைப்பதன் மூலம் நாம் மக்களுக்கு அனைத்து சேவைகளையும் ஒரே கரும பீடத்தினூடாக வழங்கக்கூடிய 'முழுமையான அரச எண்ணக்கருவை' நோக்கி நாம் முன்னேறுகின்றோம். 

அப்பொழுது நாம் பல் காரிய சேவை மையமாக உயர்மட்டத்தில் சமூக பூர்த்தி அழகான SMART கிராமமாக அமைவோம். அந்த தேர்ச்சிமிக்க கிராமத்துடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் வியாபாரத்தையும் வினைத்திறன்மிக்க வெளிமயத்துடன் நாட்டின் முன்னேற்றத்தையும் தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவது எமது அடிப்படை எதிர்பார்ப்பாகும். இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக தேவையான தகவல் தொடர்பாடல் கொள்கையொன்றையும் ஈ-சட்ட முறைமையொன்றையும் எனது அரசு தயாரித்துள்ளது. அத்தியாவசியமான அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இப்பொழுது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதனால், தேர்ச்சிமிக்க இலங்கையை நோக்கிய நோக்கத்தை எதிர்வரும் 5 - 6 ஆண்டுகளில் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2013 உலக மகாநாட்டு விருது வழங்கும் விழா இந்த பின்னணியில் தான் இலங்கையில் நடைபெறுகிறது. எமது நாட்டையும் பொருளாதாரத்தையும் மிக பாதாளத்திற்கு இட்டுச்சென்ற 30 வருட துன்பமிக்க பயங்கரவாதத்தை முடிவுறுத்தி இன்று இலங்கை மீளமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள். கொழும்பு நகரம் இன்று நன்கு திட்டமிடப்பட்ட சூழல் நேயம்கொண்ட கலாசார உயிரோட்டமுள்ள நகரமாகும். இன்று இலங்கை உலக முறைமையோடு இணைந்த அறிவை பலப்படுத்திக்கொண்ட போட்டிப் பொருளாதாரத்துடனான தேசமாகும். இங்கு கூடியிருக்கின்ற அனைவரும் எம்மைப்போன்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வெற்றி தொடர்பிலான காரணிகளில் முழுமை பெற்றிருக்கிறார்கள் என நான் நம்புகிறேன். ஈ- அபிவிருத்தி முயற்சிகளில் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அனைத்து நாடுகளையும் இச்சந்தர்ப்பத்தில் நான் பாராட்டுகின்றேன்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தேவை ஒத்துழைப்பு மற்றும் அதன் விரிவான பரவல் பற்றி எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. மக்கள் சமூகத்திலும் நாட்டிலும் சமூக பொருளாதார சூழலின் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு இருக்கின்றது. உலக விருது மகாநாட்டு விழா போன்ற சர்வதேச மேடைகள் எமக்கு அறிவையும் வெற்றியையும் பரிமாறிக்கொள்வதற்கும் எதிர்காலத்திற்காக எமது செயல்முறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் கிடைக்கின்ற மாபெரும் சந்தர்ப்பமாகும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பூகோள சமூக அல்லது கிராமிய வரையறைகள் ஊடாக சென்று பின்தங்கிய மற்றும் அபிவிருத்தி குறைந்த மக்கள் பிரிவுகளுக்கு எடுத்துச்செல்ல முடியும் என்பதில் நீங்கள் அனைவரும் என்னுடன் உடன்படுவீர்கள் என நான நம்புகிறேன். அதனால் இது கனவு மாத்திரமல்ல நனவாக்கிக்கொள்ளக்கூடிய நோக்கமாகவும் இலக்காகவும் மாற்றிக்கொள்வது எமக்குள்ள பொறுப்பாகும். இறுதியாக உலக மகாநட்டு விருது வழங்கும் விழாவை ஒழுங்கு செய்வதற்கு கஷ்டப்பட்டு பணியாற்றிய அனைவரையும் நான் பாராட்டுகின்ற அதேவேளையில் உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்து விருது பெறுகின்ற அனைவரையும் நான் வாழ்த்துகின்றேன். வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்நாட்களை நமது நாட்டில் மகிழ்ச்சியுடன் கழிக்க வாழ்த்துகிறேன். நீங்கள் எமது நாட்டை சுற்றிப் பாருங்கள். வடக்குக்கு அல்லது தெற்குக்கு எங்குவேண்டுமானாலும் சுதந்திரமாக சென்றுவாருங்கள். நான்கு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இங்கு வந்திருந்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில இடங்களுக்கு செல்வதற்கு நாங்கள் உங்களை அனுமதித்திருக்க முடியாது. எதிர்வரும் 3 நாட்களில் முக்கியமான கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை நீங்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுக!


No comments

Powered by Blogger.