மல்வானை பின்பாஸ் அரபுக்கல்லூரி, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை பாராட்டியது
மல்வானை பின்பாஸ் பெண்கள் அரபுக்கல்லூரி, வெள்ளிக்கிழை 11-10-2013 ம் திகதியற்று, 5 ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்த மாணவ மாணவியர்களுக்காக ஒரு பாராட்டு விழாவை நடாத்தியது.
அல் முபாரக் ஆரம்பப்பாடசாலையில் சித்தியடைந்த இரு மாணவர்களுக்கும், அல் மஹ்மூத் வித்தியாலயத்தில் சித்தியடைந்த ஏழு மாணவர்களுக்குமாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், அம்மாணவர்களுடன் இணைத்து, அல் மஹ்மூத் வித்தியாலயத்தின் 5 ம் ஆண்டில் கல்லவிகற்கும் சக மாணவர்களும், மற்றும் இரு பாடசாலைகளும் கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பின்பாஸ் அரபுக்கல்லூரியின் நிர்வாகம், கல்வி நிர்வாகம், அல் மஹ்மூத் வித்தியாலயத்தின் அதிபர் உஸ்மான், இரு பாடசாலையினதும் 5 ம் ஆண்டிட்கான பொறுப்பாசிரியைகள், மற்றும் மாணவர்களின் பெற்றொர்களும் கலந்து சிறப்பித்தனர்.


Post a Comment