Header Ads



இரண்டரை வயது குழந்தையின் அருகில் குத்தப்பட்ட கத்தி அகற்றம் (படங்கள்)


(மபாஸல் மபாஸ்)

இரண்டரை வயது குழந்தையின் கண்ணருகில் குத்தப்பட்ட கத்தியை சத்திர சிகிச்சையின் பின்னர் அகற்றியுள்ளனர். இச்சம்பவம் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

கத்தியை எடுத்துக் கொண்டு ஓடிய போது தடுக்கி விழுந்ததால், கத்தி முகத்தில் குத்தியதாக தாயார் கூறியுள்ளார்.

கத்தி குத்திய நிலையிலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் குழந்தையை காப்பாற்ற முடிந்ததாகவும், தவறியாவது கத்தியை சாதாரணமாக அகற்ற முற்பட்டிருப்பின் உயிரிழப்பு அல்லது அங்கவீன நிலை ஏற்பட்டிருக்கும் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மூளை வரை உட்பதிந்துள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்பு, உடலின் ஒரு பகுதி செயற்படாமல் போதல் அல்லது கண் பார்வை இழப்பு ஏற்படும் எனினும் இக்குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் வெற்றிகரமான முறையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

(படங்கள் பின்வரும் இணைப்பில் உள்ளது)





1 comment:

Powered by Blogger.