Header Ads



கல்முனையில் மது போத்தல்களுடன் சென்றவர்கள் விபத்தில் சிக்கினர் (படங்கள்)


(யு.எம்.இஸ்ஹாக்) 

(09.10.2012) இரவு 9.30 யளவில்  கல்முனையில் வாகன விபத்தொன்று இடம் பெற்றது. கல்முனை  மதுபானசாலை ஒன்றில் இருந்து  மது போத்தல்களுடன்  வீரமுனை தமிழ் கிராமத்தை நோக்கி மோட்டார் பைசிகளில்  வேகமாக  சென்ற வேளை  எதிரே வந்த  கார் ஒன்றுடன் மோதி விபத்து நடந்தது. 

மோட்டார் பைசிகளில் எடுத்து சென்ற  மதுபானப்  போத்தல்கள் உடைந்ததால் மோட்டார் பைசிகளில் சென்ற இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன்  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மோட்டார் பைசிகள்  பலத்த சேதமாகி காணப்படுகிறது. இதேவேளை  மோதுண்ட காரும்  சேதமாகி உள்ளதுடன் காரில் இருந்த இருவரும் காயங்களுடன்  அதே வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக  கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர்.





No comments

Powered by Blogger.