ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்
இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70 வீதமானோர் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 02-10-2013 பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் உட்பட முழு இலங்கையிலும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் சித்தியடைந்தமைக்கான சான்றிதழும் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சான்றிதழ்கள் பரீட்சைகள் ஆணையாளரால் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment