Header Ads



முஸ்லிம் சகோதரரினால், சிங்கள சகோதரியின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் பதிவு


(mufazzal mafaz)

ரத்மலான பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவரினால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இணைய செய்திகள் தெரிவிக்கின்றன. 

உயர் கல்வி நிறுவனமொன்றில் கல்வி கற்கும் போது ஏற்பட்ட காதல் தொடர்புக்கு பெண்ணின் சார்பில் எதிர்ப்பு கிளம்ப அப் பெண்ணும் தனது பெற்றோரின் சொற்படி இக்காதல் தொடர்பை கைவிட முடிவு செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அவ்வாலிபர் தன்னிடம் அப்பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் இருப்பதாகவும், அவற்றை இணையத்தில் வெளிவிடுவதாக பயமுறுத்தியுள்ளார். 

இதற்கு அப் பெண் தனது முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இதனையடுத்து அவ்வாலிபர் அப்பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது ஒரு இணையத்தளம் மேற்படி வாலிபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 

இவ்வாறான காரியங்களினால் நமது சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவது மட்டுமன்றி நம்மீதான வெறுப்புணர்வு அதிகரிக்கும் என்தில் சந்தேகம் இல்லை. நமது வாலிபர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் நமது பெண்களும் அந்நியர்களால் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

சிந்தித்து செயற்படுவோம்...+

1 comment:

Powered by Blogger.