திலகரட்ன டில்ஷான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை அவர் வெளியிடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் டில்ஷான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment