கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலா
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் குழுவொன்று அண்மையில் 2013.09.30 கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள நடவடிக்கைகளைப்பார்வையிட்டது.
பிரதி அதிபர் யூ.எல்.அமீன் தலைமையில் இங்கு சென்ற இக்குழுவில் அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் அரசியல் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் இணைந்திருந்தனர்.இதே வேளை இக்குழு கிழக்கு மாகாண சபை,மாகாண கல்வித்திணைக்களம்.மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கும் விஜயம் செய்திருந்தனர்.




Post a Comment