1983களில் ஆரம்பித்த கவிதா வட்டம் மீளஉயிர்பெற்றுள்ளது
(அஸ்ரப். ஏ சமத்)
கவிஞரும் வைத்தியருமான தாசீம் அகமத் அவர்கள் 1983களில் ஆரம்பித்த கொழும்பு வகவம் கவிதா வட்டம் மீள கொழும்பில் உயிர்பெற்றுள்ளது.
அண்மையில் சிலேவ் ஜலன்ட் உள்ள முஸ்லீம் நூலகத்தில் கவியரங்குகள் மற்றும் வகவம் பற்றிய பழைய நினைவுகள் பற்றி ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆரய்ந்தனர்.
இந்நிகழ்வில் கலையண்பன் ரபீக் நாடத்திவரும் துபாய் நாட்டில் உள்ள கலசம் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக ஒளிப்பதிவும் நடைபெற்றது.
நாஹூர்க்கணி, ஆறுமுகம், முபராக் அப்துல் மஜீத், இளநெஞ்சன் முர்சித்தீன், கலையண்பன் றபீக் நஜ்முல் ஹூசைன், ரசீத் எம். இம்தியாஸ், ஹசீர் ஹக்கீம் ஆகியோரும் உரைநிகழ்த்தினார்கள். புதிய தலைவராக நஜ்முல் ஹுசைன் பொறுப்பேற்றார். கலையண்பன் றபீக்குக்கு பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது.




டாக்டர் தாசிம் இலங்கயில் இஸ்லாமியத்தமிழ் மாகநாடு நடாத்துவதற்கு அயராது பாடுபட்டார் அதில் அரசியல்வாதிகள் மெஜிக் காட்டியதால் ஒன்றுமே நடக்கவில்லை.இப்போது பழைய குருடி கதவை திறடி என்று
ReplyDeleteவகவம் கவிதை வட்டத்தை உயிர் கொடுக்கிறார் போல