Header Ads



கல்முனையில் ஹுதாத் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை மஸ்ஜிதுல் முஹம்மதி ஜிம்ஆப்பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல்ஹூதா என்பன  இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் ஹுதாத் திடலில் நடைபெறவுள்ளது.

பெருநாள் தினமான நாளை மறுதினம் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு ஆண்களுக்கும் பெண்களுக்குமாக ஒரே ஜமாஅத்தாக ​தொழுகை நடாத்தப்படும்.

இதில் கலந்து கொள்ளவுள்ளோர் தங்களது வீடுகளிலேயே வுழுச்செய்துகொண்டு வருமாறும் முஸல்லாக்களை எடுத்து வருமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் கால நிலை மாற்றத்தால்   அன்றைய தினம் மழை பெய்யுமாக இருந்தால் பெருநாள் தொழுகை மஸ்ஜிதுல் முஹம்மதி ஜூம்ஆப்பள்ளிவாயலில் நடைபெறும். பெண்களுக்கு காலை 6.30 மணிக்கும் ஆண்களுக்கும் 7.00 மணிக்கும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.