பொத்துவில் - தஹராம்பலை பகுதிக்கு வீதி அமைக்கும் ஆரம்ப பணிகள்
(ஏ.எல்.ஜனூவர்)
பொத்துவில் தஹராம்பலை விவசாயிகளின் போக்குவரத்து நன்மை கருதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் 01 மில்லியன் ஒதுக்ககீட்டின் மூலமாக வீதி அமைக்கும் ஆரம்ப பணிகள் அண்மையில் தஹராம்பளை விவசாய அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.சலாம் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வீதியை ஆரம்பித்து வைத்தார். இப்பிரதேசம் 30 வருடகாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீற்கப்பட்ட பிரதேசமாகும்.
இவ்வீதி ஆரம்ப நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், நீர்ப்பாசன மாகாணப்பணிப்பாளர் எஸ்.திலகராஜா, பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் யு.எல்.ஏ.நஸார் உட்பட விவசாய அமைப்பின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment