Header Ads



மர்ஹூம் MSM நுஸ்கி ஞாபகார்த்த கிண்ணம் நிந்தவூர் இம்றான் அணியிடம் வீழ்ந்தது...


(சுலைமன் றாபி) 

நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகம் மர்ஹூம் MSM நுஸ்கி அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்திய T20 கடினபந்து சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (13.10.2013) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்த இறுதிப்போட்டியில் நிந்தவூர் இம்றான் மற்றும் லகான் அணிகள் மோதின. முதலில் துருப்பெடுத்தாடிய இம்றான் அணி 20 ஓவர்கள் நிறைவடைவில் 226 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்தனர். இதில் இம்ரான் அணி சார்பாக அதிரடியாக ஆடிய JM நிக்சி  அஹமட் 67 பந்துகளில் 159 ஓட்டங்களை பெற்றார், இதில் பதின்நான்கு நான்கு ஓட்டங்களும், 12 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கும். பதிலுக்கு  துருப்பெடுத்தாடிய நிந்தவூர் லகான் அணி  20 ஓவர்கள் நிறைவடைவில் 131 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்களை இழந்தனர். இதேவேளை மேலதிக 95 ஓட்டங்களினால் நிந்தவூர் இம்றான் அணி சாம்பியனானது. இந்த சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக 02 சதங்களினையும், 01 அறைச்சத்தினையும் பெற்று 280 ஓட்டங்களை குவித்த தேசிய வீரர் JM நிக்சி அஹமட் தெரிவானார். உண்மையில் இந்த வெற்றியானது இம்றான் அணியின் கடந்த காலங்களில் கடின பந்து துறையில் கிடைக்கபெற்ற வெற்றிகளை விட  இந்த வெற்றி மறக்க முடியாததொன்றாக பலராலும் அவதானிக்கப் பட்டது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நிந்தவூர் வரலாற்றில் இம்றான் அணி புதிய  சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதில் மைதானத்தின் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையினை (229) பெற்ற அணியாக இம்முறை தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் பல அதிதிகளும் நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.  இந்தப்போட்டியின் இறுதியில் இரண்டு கழகங்களும் தாங்கள் வென்றெடுத்த வெற்றிக்கிண்ணங்களை மர்ஹூம் MSM நுஸ்கி சார்பாக அவரின் தந்தையாருக்கு சமர்ப்பணம் செய்தனர். 


No comments

Powered by Blogger.