Header Ads



வெள்ளைப் பிரம்பு முதலாவது கொடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது


எதிர்வரும்  15ம் திகதி வெள்ளை பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு,  வெள்ளைப்பிரம்பு கொடி விற்பனை வாரத்தின் முதலாவது தினமான  (8ம் திகதி) முதலாவது கொடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழிப்புலனற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த த சில்வா முதலாவது கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார்.ஜனாதிபதி அச்சங்கத்துக்கு ஒருதொகை நிதியை கையளித்தார்.

வெள்ளை பிரம்பு பாதுகாப்புத்தினத்தின் அடையாள வெள்ளைப்பிரம்பும்  ஜனாதிபதி கையளிக்கப்பட்டது. 

சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, குறித்த அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமாரன் ஆகியோருடன்  இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் சங்க அங்கத்தவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு, இலங்கை விழிப்புலனற்றோர் பட்டதாரிகள் சங்கம் நாடு முழுவதும் வெள்ளைப்பிரம்பு கொடி விற்பனையை  ஏற்பாடு செய்துள்ளது.


No comments

Powered by Blogger.