Header Ads



படை அதிகாரியின் முதுகுத்தண்டில் பாய்ந்தது வெடிக்காத மோட்டார் குண்டு (படம்)

மாதுறுஓயா இராணுவ சிறப்புப் படைப்பிரிவு பயிற்சி முகாமில், பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி ஒருவர், முதுகுத்தண்டில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

60 மி.மீ மோட்டாரில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த போது, இன்று 25-10-2013 எதிர்பாராத வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால், படுகாயமடைந்த அவர், பொலன்னறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முதுகுத்தண்டில் இருந்து இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் மோட்டார் குண்டை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.