பிச்சைக்காரர்களுக்கு புனர்வாழ்வு
(Nf) நுவரெலியா நகரில் இருந்த பிச்சைக்காரர்கள் மற்றும் வீதிகளில் சுற்றித் திரிந்த சிலர் ரீதிகம பிச்சைக்காரர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாநகர சபையினரும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் தளமாக திகழும் நுவரெலியா நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிச்சைக்காரர்களினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம் பொலிஸார் மற்றும் மாநகர சபை அதிகாரிகள் இணைந்து பிச்சைக்காரர்கள் மற்றும் வீதியில் சுற்றித்திரிபவர்களை நேற்று கைது செய்தனார்.
12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நகரத்திற்குள் பிச்சை எடுத்தல் மற்றும் சுற்றித் திரிதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தமது விலாசங்களை உறுதிசெய்த இருவருக்கு தலா 100 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 10 பேரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஊடாக ரீதிகம பிச்சைக்காரர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புமாறு நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment