பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைகழக கல்வியை தனியார் மயமாக்குதல், பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்படுதல், மற்றும் கைது செய்யபப்டுதல் ஆகியவற்றை கண்டித்தும் இலவச கல்வியைப் பாதுகாக்குமாறும் கோறிக்கை விடுத்து பேராதனை பல்கலைகழக மாணவ மாணவிகள் (2013 10 02 மாலை 4 மணி) கண்டி மணிக்கூண்டுக் கோபுறத்திற்கு முன்னாள் சத்தியாகிரகம் ஒன்றில் ஈடுபட்டனர்.
பல்கலைகழக மாணவர் சங்கங்களின் தலைவர்கள் உற்பட ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இச் சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டனர்.



Post a Comment