மேல் மாகாணத்தில் தமிழ்மொழி முலம் 1500 மாணவர்கள் 0 பூச்சியம் எடுத்தவர்கள்
(அஸ்ரப் ஏ சமத்)
மேல் மாகாணத்தில் தமிழ்மொழி முலம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுள் 1500 மாணவர்கள் 0 பூச்சியம் புள்ளி எடுக்கும் மாணவர்கள் உள்ளனர். இது மேல் மாகாண கல்வி வரலாற்றில் உள்ள பாரிய பின்னடைவாகும். இத் தகவல்களை கடந்த வருடம் புலமைப்பரிசில் புள்ளிகளை பரிசீலிக்கும்போதே தெரியவந்ததாக மேல் மாகாண கல்வியமைச்சின் தமிழ்ப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் பயிற்சி எடுக்காமல் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் 350 ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பித்து வைக்கும் வைபவத்திலேயே மேற்கண்ட தகவளை உதவிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந் நிகழ்வு பம்பலப்பிட்டி ஹிந்துக் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சியே இல்லாமல் 350 ஆசிரியர்கள் பண்நெடுங்காலமாக ஆரம்பப் பாடசாலைகளில் கல்விபுகட்டி வருகின்றனர். அவர்களுக்கு 6 சனி ஞாயிறு திணங்களில் மாத கால பயிற்சியளித்து பயிற்சி ஆசிரியர்களாக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக மேல் மாகாண கல்வியமைச்சரும் முதலமைச்சருமான பிரசன்ன ரணதுங்க 100 மில்லியன் ருபாவை தமிழ் கல்வித் திணைக்களத்திற்கு ஒதுக்கியுள்ளதாகவும் கல்விஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அயிலப்பெரும மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment