Header Ads



கிழக்கிழங்கை ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களின் ஆக்கத் திறன் கண்காட்சி

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடியில் இயங்கி வரும் கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் ஸாஹிறா விசேட தேவையுடைய பாடசாலையின் 2013ம் ஆண்டிற்கான விசேட தேவையுடையோரின் ஆக்கத் திறன் கண்காட்சியும் விற்பனையும் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை காலை 08.30 மணி தொடக்கம் 3.00மணி வரை பாடசாலை மாணவர்களும் பிற்பகல் 03.00மணி முதல் இரவு 08.30மணி வரை பெரியவர்களும் பார்வையிட முடியும் என கிழக்கிழங்கை ஸாஹிறா இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.பஷீர் (மதனி) தெரிவித்தார்.

1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குறித்த விசேட தேவையுடையோர் பாடசாலையில் சுமார் 47க்கும் மேற்பட்ட விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.