Header Ads



கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை நாளை ஜனாதிபதி மஹிந்தவினால் திறக்கப்படுகிறது

(எம்.எம்.ஏ. ஸமட்)

கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை நாளை 27ஆம் திங்கட் கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இப்பாதை இலங்கையின் இரண்டாவது அதிவேகப் பாதையாகும்.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேகப் பாதை 25.8 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இவ்வதிவேகப்பாதை களனி புதிய பாலத்திலிருந்து ஆரம்பித்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பாதையுடன் முடிவுறுகிறது.

2009ஆம் ஆண்டு இப்பாதைக்கான நிர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இப்பாதை  நிர்மானம் தொடர்பில் 1968ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது,  ஏறக்குறைய நாலரை தசாப்தங்களின் பின்னர்  350 அமெரிக்க டொலர் செலவில் நிர்மானிக்கப்பட்ட இவ்வதிவேகப் பாதையினூடாக 20 நிமிடங்களில் விமான நிலையத்தை சென்றடைய முடியும்.  இதன் மூலம் பிரயாணிகளின் நேரம் சேமிக்கப்படுவதுடன் வாகன நெரிசல்களும் குறையுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு புத்தளம் பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அமைச்சு ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல குறிப்பிடுகிறார். 

இவ்வீதி விஸ்தரிப்புப் பணியின் முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பெகலியகொட முதல் ஜா-எல வரை மேற்கொள்ளப்படவுள்ளது. 3.5 பில்லியன் ரூபா நிதிச் செலவில் விஸ்தரிக்கப்படவுள்ள கொழும்பு புத்தளம் வீதியின் முதற்கட்ட நிர்மானப் பணிகளை 2014ஆம் ஆண்டு  ஜுலை மாத்தில் நிறைவு செய் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் பிரதி அமைச்சர் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இவ்வீதி விஸ்தரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுமென மேலும் குறிப்பிடுகிறார்.


No comments

Powered by Blogger.