யானைகளின் தாக்குதல் - நடுங்கும் முஸ்லிம் கிராமங்கள் (படங்கள்)
(யு.எம்.இஸ்ஹாக்)
நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 24.10.2013 இரவு 11.00 மணிக்கு நாவிதன்வெளி 05ஆம் கிராமம் வீரதிடலில் உள்ள விதவை பெண் ஒருவரது வீட்டை தாக்கிய காட்டு யானைகள் பெருந்தொகையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக வீட்டில் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் வீட்டு சுவர் சரிந்து விழும் சத்தத்தில் குறித்த பெண் கண்விழித்த போது முன்னால் யானை ஒன்று நின்று கொண்டு வீட்டுக்குள் இருந்த நெல் மூடைகளை சாப்பிடுவதைக்கண்டு அதிர்ச்சியில் செய்வதறியாது ஒருவாறு தப்பித்து வெளியே ஓடியுள்ளார். இறைவன் உதவியால் அவருக்கு எந்தவொரு விபரீதமும் இடம் பெறவில்லை.
இவ்வாறு உயிரை பணயம் வைத்து தப்பி பிழைத்தவர் 65 வயதுடைய முகையதீன் பாவா உமறும்மா என்பவராவார். இதனால் தனக்கு 30,000 ரூபா நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சவளக்கடை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப் பட்ட உமறும்மா என்பவர் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் குடியிருக்கும் பிரதேசம் மிகவும் இருள் சூழ்ந்துள்ளது .பலதடவைகள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருக்கும். எம்மால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கும் மின் குமிழ் பொருத்தி தருமாறு பல தடவைகள் எடுத்து கூறியும் அவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்தார் . இது வரைக்கும் இவர்களில் ஒருவரேனும் எங்கள்கள் கிராமத்தின் நிலையை வந்து பார்க்கவில்லை என்பதை அந்த கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்த கிராமத்தின் சகல பணிகளையும் முன்னின்று செகின்ற சமுக சேவாயாளர் எம்.பீ.சாஹிபு லெப்பை ஜே.பீ பொலிஸ் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர்களுக்கு இந்த விடயத்தை அவசரமாக தெரியப்படுத்தியுள்ளார்.



Post a Comment