இலங்கையில் முதற் தடவையாக சுகாதார நிறுவனங்களில் இலத்திரனியல் கழிவகற்றும் நிகழ்ச்சித் திட்டம்
( எம்.எம்.ஏ.ஸமட்)
இலங்கையில் முதற் தடவையாக சுகாதார நிறுவனங்களில் இலத்திரனியல் கழிவகற்றும் நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நஞ்சியல் மற்றும் தேசிய நஞ்;சுத் தகவல் நிலையம் ஏற்பாடு செய்துள்ள இலத்திரனியல் கழிவகற்றல் நிகழ்ச்சித்திட்டம் இம்மாதம் 28ஆம் திகதி திங்கட் கிழமை வைத்தியசாலையில் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 3ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதியை 'தேசிய நஞ்சுத் தடுத்தல்' வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிதிட்டமானது தேவயைற்ற இலத்திரனியல் உதிரிப்பாகங்களைச் சேகரித்து அவற்றை மீள் சுழற்சிக்காக கையளிப்பதாக அமையவுள்ளது.
அதற்கமைய, பாவைனக்குதவாத மருத்துவ, ஆய்வுகூட இலத்திரனியல் உபகரணங்கள், கனிணிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய தேவையற்ற இலத்திரனியல் உபகரணனங்கள் சேகரிக்கப்பட்டு அவை மீள் சுழற்சிக்காக கையளிக்கப்படுமென கொழும்பு தேசிய வைத்தியசாலைகயின் தேசிய நஞ்சுத் தகவல் நிலையத்தின தலைமை அதிகாரி பொது வைத்திய நிபுணர் டாக்டர் வர்ண குணதிலக தெரிவித்துள்ளார்.
தேவையற்ற குறிப்பிட்ட இலத்திரனியில் உபகரணங்களினால் சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.
'நஞ்சும் சுற்றாடலும்' எனுத் தொணிப் பொருளில் நடைபெறமுள்ள தேசிய நஞ்சுத் தடுத்தல் வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் இது தொடர்பான பல்வேறு முன்னெடுப்புக்கள் நடைமுறைப்படுதப்படும்.
மேலும், இம்மாதம் 30ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் நஞ்சின் தாக்கத்தை அறிவுறுத்தும் வைத்தியக் கண்காட்சியொன்றும் இடம்பெறவுள்ளது. பொதுமக்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்படும் இக்கண்காட்சி உயர்தர மாணவர்களுக்கு பிரயோசனமுடையதாக அமையுமென பொது வைத்திய நிபுணர் டாக்டர் வர்ண குணதிலக குறிப்பிடுகிறார்.

Post a Comment