வவுனியாவில் மஞ்சல் உற்பத்தி வெற்றியளித்துள்ளது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
வவுனியா விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் வவுனியா மாவட்டத்தில் பத்து (10) ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சல் பயிர்ச் செய்கை பரிட்சார்த்தமாக மேற் கொள்ளப்பட்டு அது தற்போது வெற்றியளித்துள்ளதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் திருமதி அஸ்கர் சைலா பானு தெரிவித்தார்.
ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற் கொள்ளப்படும் இத்திட்டத்திற்கான சகல பயிற்சிகளையும், பயிச் செய்கைக்கான உரவகைகள் உள்ளிட்ட உதவிகளை விவசாயத் திணைக்களம் வழங்கி வரவதாகவும் இப்பயிர்ச் செய்கைக்குரிய சாதகமான கால நிலை காணப்படுவதாகவும் பணிப்பாளர் சைலா பானு தெரிவித்தார்.
.jpg)
Post a Comment