26வது ஆசிய சட்டத்துறை மகாநாடு - ஆரிப் சம்சுடீன் சிங்கபூர் பயணமானார்
26 வது ஆசிய சட்டத்துறை மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் இன்று (26)சிங்கபூர் பயணமானார்.
சிங்கபூர் சட்ட சமூகத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறும் இம்மகாநாட்டில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்ப்பில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
'சட்டத்துக்கு அப்பால்' என்ற தொணிப் பொருளில் 3 நாட்கள் நடைபெறும் இந்த 26வது ஆசிய சட்டத்துறை மகாநாட்டில் சிங்கப்பூரின் பிரதம நீதியரசர் சுந்தரஸ் மெனொன் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார, நீதித்துறை அமைச்சர் சன்முகம் உட்பட ஆசிய நாடுகள் பலவற்றின் சட்ட வல்லுனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்
அத்துடன், மகாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் சிங்கப்பூரின் இலங்கைக்கான தூதுவர் பேரியல் அஷ்ரப் உட்பட அந்நாட்டு உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment