Header Ads



வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

பரீட்சை இலக்கம் மற்றும் கடவுச்சீட்டு இலக்கம் என்பவற்றை வெளிநபர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு, இம்முறை கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களிடம் இருந்து இந்த இலக்கங்களைப் பெற்று ஒருசிலர் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய மோசடி பேர்வழிகளிடம் அகப்பட வேண்டாம் என பரீட்சார்த்திகளிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுள்ளது. nf

No comments

Powered by Blogger.