ராஜபக்ஸவினருக்கு அச்சப்பட வேண்டுமா..?
தவறு செய்தாலே மக்கள் அச்சமடைய வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பி.பி.சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
ஊடகவியலாளரின் கேள்வியொன்றிற்கு பதிலளித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்; "ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோன்று, அவர்கள் பாதிக்கப்பட்டனர். எமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு சுதந்திரமாக வீதியில் இறங்கி பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. பாடசாலைகளுக்கும் தொழிலுக்கும் அச்சத்துடனேயே செல்ல வேண்டி ஏற்பட்டது. எனினும், இவை அனைத்தும் இன்று மாற்றமடைந்துள்ளன," என்றார்.
இதேவேளை, "உங்களுக்கு மாத்திரமல்ல, உங்களது சகோதரர்களுக்கும் மக்கள் பயப்படுகின்றனர். மக்கள் ஏன் ராஜபக்ஸவினருக்கு அச்சப்பட வேண்டுமா?, என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பிய போது, "இல்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை. மக்கள் தவறு செய்தால் மாத்திரமே அச்சப்பட வேண்டும்," என்றார் அமைச்சர் பசில் ராஜபக்ஸ.
.jpg)
Post a Comment