Header Ads



யாழ்ப்பாணத்தில் அஸ்மீன் அய்யூப்புக்கு வரவேற்பு நிகழ்வு

(பா.சிகான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் முஸ்லீம் வட்டார செயலணி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் வரவேற்பும் அறிமுக நிகழ்வும் நாளை (11) வெள்ளியன்று  மாலை 4 மணிக்கு சின்னப்பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது  தற்போது வட மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள அஸ்மீன் அய்யூப்  வரவேற்கப்படுவதுடன், வட மாகாண சபை தேர்தலில் அஸ்மீன் அய்யூப்பை களமிறக்கிய  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும்.

இந்நிகழ்விற்கு எம்.எம்.எம். நிபாஹிர் தலைமை வகிப்பதுடன்,மௌலவி அப்துல் அஸீஸ் காஸிமி ஆசியுரையினையும் வழங்கவுள்ளனர்.
.
இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூரா சபை உறுப்பினர் பிர்தௌஸ்,நிறைவேற்று குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ,நீதிக்கும் சமத்துவத்திற்குமான முன்னணி தலைவர் நஜா முஹம்மத்,
மஸ்ஜஜித் முஹம்மதியா நிர்வாக சபை உறுப்பினர் தாஹிர் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக பங்குகொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.