Header Ads



கொழும்பு பிரித்தானியா தூதுரகத்தில், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

இலங்கையின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியாவில் உள்ள டயஸ்போராக்களை சந்தித்தது தொடர்பான மீளாய்வுக் கலந்தரையாடல் ஒன்று இலங்கையில் உள்ள பிரித்தானியா தூதுவராலயத்தில் இன்று (10) இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்தார்.

மேற்படிக் கலந்தரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மற்றும் தூதுவராலய அதிகாரிகள், இண்டர்நெசனல் அலட் அதிகாரிகள், இலங்கையின் வன்டெக்ஸ் இன்சிடியுட் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக் (வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்), வசந்த சேனநாயக்க, சிகான் சேனசிங்க, நிரோசன் பெரேரா உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.

மேற்படி மீளாய்வுக் கலந்துரையாடலில் டயஸ் போராக்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்ளும் தற்போது மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், முஸ்லிம் மக்கள் மீதான பிரச்சிணைகள் உள்ளிட்ட பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன். இலங்கையில் வருடாவருடம் கொண்டாடப்பட்டு வரும் ஹீரோக்கள் தினத்தை வருடத்தில் 180வது நாளன்று இலங்கையில் மத்திய பகுதியான கேகாலை போன்ற இடத்தில் அதனை ஞாபகார்த்த நாளாக கொண்டாடுவது சிறந்தது என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதாக பாராளுமன்ற உறப்பினர் ஹூனைஸ் தெரிவித்தார்.

கலந்தரையாடலில் மேற்படி பாராளுமன்ற குழு எதிர் வரும் வருடம் பெப்ரவரியில் மீண்டும் லண்டன் செல்வதற்கும் தீர்மாணித்துள்ளனர்.

மேற்படிக் கலந்தரையாடலை இண்டர்நெசனல் அலட் மற்றும்  இலங்கையின் வன்டெக்ஸ் இன்சிடியுட் நிறுவனம் ஆகியன இணைந்து செய்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.