Header Ads



முஸ்லிம் ஆசிரியரின் வீட்டில் முளைத்த புத்தர் சிலை அகற்றப்பட்டது

(அனா)

வாழைச்சேனை பிரதேச  செயலாளர் பிரிவில் தென்னந்தோட்டம் ஒன்றில் தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வாழைச்சேனை ஸ்ரீ புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் வைக்கப்பட்ட புத்தர் சிலை இன்று (10.10.2013) காலை அவ் விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கும்புருமூலை கிராம சேவகர் பிரிவில் பாசிக்குடா வீதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான எச்.எம்.எம். இப்றாகிம் என்பவருக்குச் சொந்தமான காணிக்குள் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை இன்று காலை அவ் விடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக காணி உரிமையாளரான  எச்.எம்.எம். இப்றாகிம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.