'தேசிய விஷத் தவிர்ப்பு' வாரம் பிரகடனம்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மனித உயிர்கள் என்பது விலை மதிப்பற்றது இந்த வகையில் ஒரு மனிதனின் உயிர் வீணாக இழக்கப்படுவது மனித சமுகத்தில் தவிர்க்கப்படல் வேண்டும். இன்று உலகில் எங்கு பார்த்தாலும் மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத காலமாக மிருகங்களை விடவும் மோசமான முறையில் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.
இந்தவகையில் ஏனையவற்றால் ஏற்படும் மரணங்களை விட விஷம் மூலம் ஏற்படும் மரணங்களை தவிர்ப்பதற்காக இம்மறை சுகாதார அமைச்சினால் தேசிய விஷ தவிர்ப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 3 ஆம் திகதி வரையிலான காலம் “தேசிய விஷ தவிர்ப்பு” வாரமானது விஷங்கள் தொடர்பான விஞ்ஞான சாஸ்திர, விஷத் தகவல் தேசிய நிலையம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
உடலில் விஷம் ஏறுவதால் நோய் வாய்ப்படும், மரணிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்து வருவதாக வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 20,000 பேர் மருந்து மற்றும் விஷம் காரணமாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். வருடாந்தம் உடலில் விஷம் ஏறுவதால் 120,000 பேர் வரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படு கின்றனர்.
1000- 1500 பேர் வரை மரணிக்கின்றனர். இதில் 55,000- 60,000 க்கும் இடைப்பட்டோர் கிருமிநாசினி உட்பட பீடை நாசினிகள் விஷமாவதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 40,000 - 45,000 க்கு இடைப்பட்டோர் பாம்புகள் தீண்டுவதனால் நோய்வாய்ப் படுகின்றனர். வருடாந்தம் பாம்பு தீண்டுவதனால் 100 பேர் வரை மரணிக்கின்றனர்.
மருந்துகளையும் கிருமி நாசினிகளையும் பிள்ளைகளுக்கு இலகுவாக எடுக்கக் கூடிய இடங்களில் வைப்பதனால் பிள்ளைகள் மத்தியில் திடீர் விஷ சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப மயம் காரணமாக சுற்றாடலுக்குள் வெளியேற்றப்படும் கழிவுகளால் விஷம் அதிகரித்துள்ளது.
இலத்திரனியல், காபன், உணவுப் பொருள் கழிவுகள், நீர், வாயு மாசடைதல் காரணமாக விஷத் தன்மை அதிகரிக்கி ன்றது. இவ்வாரத்தில் பொதுமக்களை விழிப்பூட்டும் கல்விப் பாத யாத்திரைகள் கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் ஆகியன நடத்தப்படும். விஷம் காரணமாக நோய்பாய்ப்படும், மரணிக்கும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இவ்வாரத்தின் நோக்கம் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹீபால தெரிவித்துள்ளார்.
* வருடாந்தம் 120,000 பேர் பாதிப்பு * 1000 முதல் 1500 பேர் வரை பலி
.jpg)
Post a Comment