நாவிதன்வெளி பிரதேச சபையினால், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
(யு.எம்.இஸ்ஹாக்)
நாவிதன் வெளி பிரதேச சபையினால் அதன் எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல மாத காலமாக நாவிதன் வெளி பிரதேசத்தில் வரட்சி நிலவியதால் குடி நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. குடிநீர் வழங்கும் விடயத்தில் முஸ்லிம் பிரதேசங்களான வீரதிடல், 04ஆம் கொலனி,05ஆம் கொலனி ,12ஆம் கொலனி மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர்.
அது மட்டுமன்றி குறித்த பிரதேசங்கள் காடும் வயலும் சூழ்ந்த பிரதேசங்களாகும் . இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறமுடியாத அளவு இருள் நிறைந்தும் தெரு மின் விளக்கு பொருத்துவதில் புறக்கணிப்பு செய்யப் படுவதனால் காட்டு யானை ,விச ஜந்துக்களின் தாக்கதுக்குள்ளா கின்றோம் என குறித்த கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Post a Comment