Header Ads



ரணில், தலைவராக இருப்பதால் மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை - தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவிப்பு

தலைமைத்துவ பொறுப்பிலிருந்து விலகி, மக்கள் ஆதரவுள்ள ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்குமாறு, அந்த கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் கட்சித் தலைமைத்துவத்திற்கு அறிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் சிலவற்றின் தலைவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

இது தொடர்பான எழுத்துமூல கோரிக்கை, தேசிய ரயில்வே சேவைகள் தொழிற்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய ஊழியர் சங்க, பெற்றோலிய கூட்டுத்தாபன கிளையின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

புதிய யோசனைகளை முன்வைக்குமாறு கட்சி தெரிவித்துள்ள நிலையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்பதையே அனைவரும் இன்று கூறி வருவதாகவும், முதுகெலும்பு இருப்பின் நாளை நடைபெறவுள்ள கட்சி ​செயற்குழு கூட்டத்தில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தலைவராக பதவி வகிப்பதால், மக்களுக்கு எவ்வித பலனும் கிடைப்பதில்லை என தேசிய ரயில்வே சேவைகள் தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர் நிஹால் குணரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

மக்களின் வாக்குகள் மூலம் தெரிவாகாத செயற்குழு உறுப்பினர்களே தொடர்ந்தும் தலைவரைப் பாதுகாத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. 'என்னை யாராலும் அசைக்க முடியாது. நான்தான் ஆயுட்கால எதிர்க்கட்சித்தலைவன்' என்று 'உடும்புப்பிடியாக' இருப்பதால்தான் என்னவோ..... தனது கட்சி தோல்வியில் 'சாதனை' படைத்துவருகிறது.!!!! வாழ்க உங்களின் சேவை........????

    ReplyDelete
  2. 'என்னை யாராலும் அசைக்க முடியாது. நான்தான் ஆயுட்கால எதிர்க்கட்சித்தலைவன்' என்று 'உடும்புப்பிடியாக' இருப்பதால்தான் என்னவோ..... தனது கட்சி தோல்வியில் 'சாதனை' படைத்துவருகிறது.!!!! வாழ்க உங்களின் சேவை........????

    ReplyDelete

Powered by Blogger.