Header Ads



கிழக்கு மாகாணத்திலிருந்து 9 முஸ்லிம் மாணவர்கள் தேசியமட்ட போட்டிக்கு தெரிவு (விபரம் இணைப்பு)

(யு.எம்.இஸ்ஹாக்)

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கல்வி சேவைகள் அமைச்சினால் நடாத்தப்படவுள்ள தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான  போட்டிக்காக மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டி முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டி, சித்திரப் போட்டி,கட்டுரைப் போட்டிகளுக்கான வலய மட்ட முடிவுகள்  கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தால்  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 09 முஸ்லிம் மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்வர்களுக்கான தேசிய மட்டப் போட்டி இம்மாதம் 10ஆந் திகதிக்குப் பின்னர் நடை பெறவுள்ளதாக  கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜே.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

சித்திரப் போட்டி
பிரிவு- 01
இரண்டாமிடம் - எம்.நிக்ஷலா  -   தி ஃஅல்-மின்ஹாஜ் ம.ம.வி
மூண்றாமிடம்  - எம்.என். பாத்திமா அஹ்னா – தி ஃஅந் நஜாத் ம.வி

பிரிவு-02
இரண்டாமிடம் - எஸ்.மிப்ராஹ் அகமட்    - தி ஃகிண்ணியா ம.க

பிரிவு-03
முதலாமிடம்  - எம்.எஸ்.சதீகா   -   திஃ கிண்ணியா மகளீர் ம.வி
இரண்டாமிடம் - ஏ.நஸீஹா   -      கமுஃ அல்-மனார் ம.க

பேச்சுப் போட்டி –தமிழ் மொழி

முதலாமிடம்  -  என்.ஜே.இஸட். அனஸ் - கமு ஃஅல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது
மூண்றாமிடம்  -  எம்.எஸ்.எப். சுஜி  - தி ஃமூதூ பாத்திமா மகளிர் வித்தியாலயம்


கட்டுரைப் போட்டி –தமிழ் மொழி

பிரிவு- 01
முதலாமிடம்  -  எம்.பாத்திமா ஸம்யா  - அக் ஃஅல்-முனீரா பெண்கள் உயர்தர பாடசாலை

பிரிவு- 02

முதலாமிடம்  -  எம்.எப்.பாத்திமா றுகைமா - மட் ஃமமஃ ஏறாவூர் அல் முனீரா பாலிகா ம.வி

பிரிவு- 03

முதலாமிடம்  -  என்.எம்.றிஸ்னா -  அக் ஃ அல் ஹலம் வித்தியாலயம்

கட்டுரைப் போட்டி –  ஆங்கில  மொழி
பிரிவு- 01
இரண்டாமிடம் -   எம்.அஹீல் ஹனாம்     - தி ஃரீ.பீ. ஜாயா வித்தியாலயம்

பிரிவு- 02
இரண்டாமிடம் -   எம்.ஏ.வீ. நஸ்லுன் சிதாரா - தி ஃகுறிஞ்சாக்கேணி மகளிர் ம.வி

No comments

Powered by Blogger.