காத்தான்குடியில் மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிப்பது பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினர் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த 'மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக உபயோகிப்பது' எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை மாலை புதிய காத்தான்குடி பல்நோக்கு மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் 'முன்னோக்கிய பாதை' எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் பொறியியலாளர் ஏம்.ஏ.சீ.எம்.நௌபல் 'உடலுக்கு பாதிப்பில்லாமல் எவ்வாறு மின்சாரத்தை உபயோகிப்பது' 'த 'மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக உபயோகிப்பது' போன்ற தலைப்புக்களில் விளங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது புதிய காத்தான்குடி 167சீ கிராச சேவகர் எம்.ரஊப்,இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை தொண்டர் இணைப்பாளர் எம்.ஐ.எம்.சலீம்,செஞ்சிலுவைச் சங்க மட்டு கிளையின் தொண்டர் இணைப்பாளரும் முதலுதவிப் பயிற்றுவிப்பாளருமான எஸ்.கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment