நன்னீர் மீனவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்
(ஏ.எல்.ஜனூவர்)
மிகவும் பின்தங்கிய பிரதேசமான அக்கரைப்பற்று இழுக்குச்சேனை - நீத்தை பிரதேச நன்னீர் மீனவர்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு இழுக்குச்சேனை ஹூதா வித்தியாலய அதிபர் எம்.ஜெலீல் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வைபத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு நன்னீர் மீனவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
அமைச்சருடன் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம், பிரதேசசபை தவிசாளர் எம்.ஏ.றாஸிக், கூட்டுறவு உதவி ஆணையாளர் ஏ.எல்.எம்.பதுறுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.எல்.ஹாஜா முகைதீன், மீனவர் உத்தியோகத்தோர் இம்தியாஸ் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



Post a Comment