வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம்..!
(Sfm) வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பயிற்றப்பட்ட பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும், பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் காரணமாகவும், இந்த பலன் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய.
பணிப்பெண்களாக யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என்ற கொள்கையே கடந்த காலத்தில் இருந்தது. எனினும் தற்போது இதற்கு தகமை மற்றும் குடும்ப பிண்ணி தொடர்பான அறிக்கை மற்றும் அவர்களது விளையாட்டு திறமை, மற்றும் தொழில் பயிற்சி சான்றிதழ் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அதனூடாக அவர்களுக்கு அதிக வருமானம் மற்றும் தொழில் பாதுகாப்பினையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment