நீதிபதியின் மகன் ஆடிய நாடகம்
இனந்தெரியாத குழுவொன்றினால் தான் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் எல்.ஏ சோமசிங்கவின் மகனுடைய கடத்தல் நாடகத்தினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 28ம் திகதி மொறட்டுவ ராவத்தவத்தைப் சந்தியில் வைத்து இனந்தெரியாத குழுவொன்று தன்னைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர், வட்டுவ மொலிங்கொட பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டதாகவும் நீதவானின் மகன் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்ததாக மவுண்ட்லவெனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மொறட்டுவ பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமெராக்களில் பதிவாக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகளும் ஆராயப்பட்டது.
அத்துடன், நீதவானின் மகனுடைய தொலைபேசி அழைப்புகள் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து, நீதவானின் மகனுடைய நண்பர் ஒருவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் உண்மைகளைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர், தனது நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் அவர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு கடத்திச் செல்லப்பட்டதாக நாடகமாடியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment