Header Ads



திருகோணமலையில் நீர்ப்பாசன திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு


(இர்பான்)

திருகோணமலை மாவட்டத்தில் 37.மில்லியன் நிதியில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை கிழக்கு மாகாணஆளுனர் ரியல் எட்மிரல் மொஹான் விஜயவிக்ரம கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு  மக்களிடம் கையளித்தனர்

கிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பும் நிர்மாணமும் கிரமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் யுத்த சூழ் நிலையாலும் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்ட நான்கு நீர் திட்டங்கள் 37.மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
   
குறித்த நான்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் மூலம் 1300 ஏக்கர் வயல் காணிகள் ஒரு வருடத்திற்கு இரண்டு தடவை நெற்பயிர் செய்கை செய்வதற்கு கூடிய நிலமை உறுவாகியுள்ளதாகவும் இன் நீர்ப்பாசன திட்டங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களுக்கு விவசாய அமைப்புகள் நன்றி தெறிவித்துள்ளனர்.





No comments

Powered by Blogger.